திருப்புவனத்தில் பாஜக - அதிமுக இணைந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
x
Daily Thanthi 2025-07-02 08:18:34.0
t-max-icont-min-icon

திருப்புவனத்தில் பாஜக - அதிமுக இணைந்து ஆர்ப்பாட்டம்

அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் இன்றைய தினம் 2.07.2025 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் பாஜக - அதிமுக இணைந்து ஆர்பாட்டம் நடத்த இருப்பதாக பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா எக்ஸ் தளபதிவில் தெரிவித்திருந்தார்.

  மேலும் திருபுவனம் அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று பாஜக - அதிமுக இணைந்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பாஜக சார்பில் எச்.ராஜா உள்ளிட்டோர் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story