
நாகை பரப்புரைக்காக சென்னையில் இருந்து திருச்சி சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய்
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கிய அவர் இன்று(சனிக்கிழமை) நாகையில் 2-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் நாகை பரப்புரைக்காக சென்னையில் இருந்து தவெக தலைவர் விஜய் திருச்சி சென்றடைந்தார். இதனைத்தொடர்ந்து தொண்டர்களின் பலத்த வரவேற்புக்கிடையே பரப்புரை நடைபெறும் இடத்திற்கு விஜய் சென்று கொண்டிருக்கிறார்.
திருச்சியில் இருந்து சுமார் 145 கிலோ மீட்டர் பயணித்து நாகையில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் செய்ய உள்ளார். இன்று காலை 11 மணிக்கு நாகப்பட்டினம் புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் பிரசாரத்தை துவக்குகிறார் விஜய்.






