
"கோட்சே கூட்டத்தின் வழியில் செல்லக்கூடாது.." - மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை 11:15 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்பொழுது கல்லூரியின் ‘Global Jamalians Block’ கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து பவள விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஆய்வு கூட்டம், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், உங்களை போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் போதுதான் எனக்கு எனர்ஜி அதிகமாகுகிறது. அதிலும் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு உடனே வருகிறேன் என சொல்லிவிடுவேன்.
காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கான பல வழிகள் உள்ளன. ஆனால், மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.






