மகா கும்பமேளாவின் மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
Daily Thanthi 2025-01-13 09:54:54.0
t-max-icont-min-icon

மகா கும்பமேளாவின் மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று தொடங்கி உள்ள மகா கும்பமேளாவில் முதல் நாளில் மட்டும் 50 லட்சம் பேர் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளாவின்மூலம் ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்டப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கும்பமேளாவுக்காக உத்தர பிரதேசம் வரும் ஒவ்வொருவரும் தலா 5000 ரூபாய் செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செலவு செய்தால் உத்தர பிரதேச அரசின் வருவாய் 2 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் செய்யும் செலவு அதைவிட அதிகமாக இருந்தால் வருவாய் மேலும் அதிகரிக்கும். 

1 More update

Next Story