ரோடு ஷோ: இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
x
Daily Thanthi 2025-12-19 05:29:21.0
t-max-icont-min-icon

ரோடு ஷோ: இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கரூரில் த.வெ.க. விஜய் கலந்துக் கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன.

இந்நிலையில் ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு விரைவில் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மனு தாக்கல் செய்யலாம் என்றும், வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story