காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025
x
Daily Thanthi 2025-09-26 05:33:45.0
t-max-icont-min-icon

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என எச்சரிக்கை

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தனியார் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விதிமுறைகளை மீறிச் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகளை நடத்த கோர்ட்டு தடை விதித்ததை சுட்டிக்காட்டி இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலாண்டுத் தேர்வுகள் நிறைவடையும் நிலையில், நாளை (செப்டம்பர் 27) முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story