முல்லைபெரியாறில் புதிய அணை.. சுப்ரீம்கோர்ட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
x
Daily Thanthi 2025-04-29 06:55:22.0
t-max-icont-min-icon

முல்லைபெரியாறில் புதிய அணை.. சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்


முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், "வல்லக்கடவு- முல்லைப் பெரியாறு சாலையை செப்பனிடுவதற்கு அனுமதிக்க முடியாது. அடிக்கடி மழையாலும், ஆற்றுநீர்ப் பெருக்காலும் சாலை பாதிக்கப்படும். வனப்பகுதி என்பதால் அனுமதிக்க முடியாது. தற்போதைய முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக அமையும். புதிய அணை கட்டுவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். புதிய அணை கட்டுவதற்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசே ஏற்கும். அணை மேற்பார்வைக் குழுவை கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story