வெடிகுண்டு வீசி பாமக பிரமுகரை கொல்ல முயற்சிதஞ்சை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 5-9-2025
x
Daily Thanthi 2025-09-05 11:32:53.0
t-max-icont-min-icon

வெடிகுண்டு வீசி பாமக பிரமுகரை கொல்ல முயற்சி

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின். இவர் பாமகவை சேர்ந்தவர் ஆவார். இவர் இன்று அலுவலகத்தில் தனது வழக்கமான பணிகள் மேற்கொண்டு வந்தார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், ம.க.ஸ்டாலின் மீது சணல் குண்டுகளை வீசியது. அத்துடன், அங்கிருந்தவர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியது. இதில் பேரூராட்சி அலுவலக கண்ணாடி, கதவுகள் சேதமடைந்தது.

இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாக ம.க.ஸ்டாலின் உயிர் தப்பினார். ம.க.ஸ்டாலின் மீதான கொலை முயற்சியை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

1 More update

Next Story