நாளை தொடங்குகிறது ஜி20 உச்சி மாநாடு


நாளை தொடங்குகிறது ஜி20 உச்சி மாநாடு
Daily Thanthi 2023-09-08 05:13:14.0
t-max-icont-min-icon

உலகின் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா அலங்கரித்து வருகிறது. இந்தியாவின் தலைமையில், பல்வேறு நகரங்களில் ஜி20 பிரதிநிதிகள் பங்கேற்ற பல்வேறு துறை சார்ந்த கூட்டங்கள் நடைபெற்றன. இதன் சிகர நிகழ்வாக ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றன.

உலக வல்லரசு நாடுகள் உள்பட முக்கியமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், இதற்காக தலைநகரில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிகுந்த உத்வேகத்துடன் ஜி-20 உச்சி மாநாட்டுக்கான தயாரிப்புகளையும் அரசு இறுதி செய்து வருகிறது.

1 More update

Next Story