சிரியா விமான நிலையங்களில் தாக்குதல்  ஹமாஸ்... ... ஹமாசின் டிரோன் தாக்குதல் முறியடிப்பு - இஸ்ரேல் ராணுவம் தகவல்
x
Daily Thanthi 2023-10-22 22:28:50.0
t-max-icont-min-icon

சிரியா விமான நிலையங்களில் தாக்குதல்

ஹமாஸ் அமைப்பினர் மற்றும் பிற பயங்கரவாதிகள் அல் அன்சார் மசூதியில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வந்ததாகவும், எனவே அங்கு தாக்குதல் நடத்தியதாவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இதனிடையே ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக சிரியா மற்றும் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இதில் விமான நிலைய ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலால் இரு விமான நிலையங்களிலும் விமான சேவை பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story