போராடும் டாக்டர்களை நேற்று மாலை 6 மணியளவில்... ... மக்களின் நலனுக்காக பதவி விலகத் தயார்- மே.வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி
Daily Thanthi 2024-09-12 09:47:49.0
t-max-icont-min-icon

போராடும் டாக்டர்களை நேற்று மாலை 6 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அரசு அழைத்திருந்தது. இதற்காக, மேற்கு வங்காள தலைமை செயலாளர் மெயில் அனுப்பினார்.

ஆனால், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தினர். மேலும், பேச்சுவார்த்தையில் குறைந்தது 30 பேரையாவது அனுமதிக்கவேண்டும், பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை வைத்தனர். இதில், நேரலை என்ற கோரிக்கையை அரசு நிராகரித்தது. இதனால் நேற்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இதையடுத்து பேச்சுவார்த்தை தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி கூறியிருக்கிறார்.

1 More update

Next Story