சீதாராம் யெச்சூரி உடலுக்கு திமுக எம்.பி கனிமொழி... ... சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு
x
Daily Thanthi 2024-09-14 06:39:05.0
t-max-icont-min-icon

சீதாராம் யெச்சூரி உடலுக்கு திமுக எம்.பி கனிமொழி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கனிமொழி பின்னர் கூறியதாவது:- எனது கட்சியின் சார்பாக நான் அஞ்சலி செலுத்தியுள்ளேன். சீதாராம் யெச்சூரியின் மறைவு அவரது கட்சிக்கு மட்டும் இன்றி நாட்டிற்கே பேரிழப்பு ஆகும். சீதாராம் யெச்சூரி மிகச்சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், தத்துவவாதி. பலருக்கும் ஊக்கமளிப்பவராக விளங்கியவர். அனைத்து கட்சியினராலும் மதிக்கப்பட்ட ஒரு தலைவராக சீதாராம் யெச்சூரி இருந்தார். எனது தந்தை கருணாநிதிக்கும் கட்சியின் தலைவர் முக ஸ்டாலினுக்கும் மிகவும் நெருக்கமானவராக இருந்தார்” என்றார்.

1 More update

Next Story