கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதல்  கிழக்கு உக்ரைன்... ... #லைவ் அப்டேட்ஸ்: மரியுபோல் நகரில் 200 உடல்கள் கண்டெடுப்பு
Daily Thanthi 2022-05-24 23:20:57.0
t-max-icont-min-icon

கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதல்

கிழக்கு உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் டொனெட்ஸ்க் பகுதியில் சுவிட்லோடர்ஸ்க் என்ற நகரத்தை ரஷிய படைகள் நேற்று கைப்பற்றி உள்ளன.

செவிரோடொனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் நகரங்களில் ரஷிய படைகள் கடும் குண்டுவீச்சை நடத்தி வருவதாக லுஹான்ஸ்க் கவர்னர் செர்கிய் ஹைடய் தெரிவித்துள்ளார்.

டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய படைகளின் தாக்குதல், இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பிய மண்ணில் நடத்தப்படுகிற மிகப்பெரிய தாக்குதல் ஆகும் என்று உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story