ரோகித், ஸ்ரேயாஸ் அரைசதம்... ஆஸ்திரேலியாவுக்கு 265... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025
x
Daily Thanthi 2025-10-23 07:48:27.0
t-max-icont-min-icon

ரோகித், ஸ்ரேயாஸ் அரைசதம்... ஆஸ்திரேலியாவுக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.


1 More update

Next Story