கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் திடீர் விரிசல் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-09-2025
x
Daily Thanthi 2025-09-08 08:05:46.0
t-max-icont-min-icon

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் திடீர் விரிசல் - சுற்றுலா பயணிகள் அச்சம்

விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இதை கடந்த டிசம்பர் 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். அத்துடன், கண்ணாடி இழை பாலத்தில் நடந்து சென்று செல்பி எடுப்பதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்த நிலையில், கண்ணாடி பாலத்தில் ஒரு இடத்தில் மட்டும் விரிசல் அடைந்துள்ளது.

1 More update

Next Story