முதல்-அமைச்சர், அமைச்சர்கள் சினிமாவில் நடிக்க தடை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
x
Daily Thanthi 2025-09-10 05:24:38.0
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர், அமைச்சர்கள் சினிமாவில் நடிக்க தடை இல்லை: ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவு


ஜனசேனா கட்சி தலைவரும், துணை முதல்-அமைச்சருமான பவன் கல்யாண் நடித்த ‘ஹரி ஹர வீரமல்லு’ என்ற படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் டிக்கெட் விலையை மாநில அரசு உயர்த்தி விற்பனை செய்ய அனுமதித்தது. இந்நிலையில், மாநில துணை முதல்-அமைச்சர் பவன் கல்யாண் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், துணை முதல்-அமைச்சராக இருந்து கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும் ஆந்திர ஐகோர்ட்டி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான விஜய் குமார் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு நீதிபதி வெங்கட ஜோதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் படங்களில் நடிக்க எந்த தடையும் இல்லை என ஐகோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. இதேபோல் முன்னாள் முதல்-அமைச்சரும், திரைப்பட நடிகருமான என்டிஆர் வழக்கில் ஐகோர்ட்டு ஏற்கனவே தனது தீர்ப்பை வழங்கியதை நினைவுகூறப்பட்டது. மேலும் இவ்வழக்கின் விசாரணை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

1 More update

Next Story