தூய்மை பணியாளர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
x
Daily Thanthi 2025-08-12 07:42:03.0
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு

தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை இதுவரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். கிட்டத்தட்ட 300 பேர் மீண்டும் பணிக்கு வந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், வழக்கை முடித்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருவதாக தூய்மை பணியாளர்கள் கூறினர். நேற்றுக்கூட அனைவரிடமும் பேசிவிட்டு தான் வந்துள்ளேன். சுமூகமாக இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்” என்று தெரிவித்தார்.

1 More update

Next Story