உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
x
Daily Thanthi 2025-09-12 03:45:42.0
t-max-icont-min-icon

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த மகளிருக்கான 80 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி 3-2 என்ற கணக்கில் போலந்து இளம் வீராங்கனை எமிலியா கோடர்ஸ்காவை போராடி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. உலக குத்துச்சண்டையில் அவர் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதே பிரிவில் ஏற்கனவே மற்றொரு இந்திய வீராங்கனை நுபுர் ஷியாரன் அரையிறுதியை எட்டி பதக்கத்தை உறுதி செய்தார்.


1 More update

Next Story