அதிமுக - பாஜக கூட்டணி டெபாசிட் இழக்கும் - உதயநிதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
x
Daily Thanthi 2025-07-13 08:23:01.0
t-max-icont-min-icon

அதிமுக - பாஜக கூட்டணி டெபாசிட் இழக்கும் - உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல பூத் முகவர்கள் பயிற்சி முகாமில் பேச்ய உதயநிதி, “பாஜக அரசு பாசிச மாடல் அரசு, அதிமுக அரசு அடிமை மாடல் அரசு, எடப்பாடி பழனிசாமி இப்போது காவி சாமி ஆகிவிட்டார்.

வருகின்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெறப் போகிறது. பூத் முகவர்கள் ஒழுங்காக செயல்பட்டால் தான் கட்சி வெற்றி பெறும். அடுத்த 8 மாதங்கள் பூத் முகவர்களுக்கு மிகவும் முக்கியமான பணிகள் உள்ளன.

பல கட்சிகள் பூத் முகவர்களையே போடாத நிலையில் டிஜிட்டல் முகவர்களை திமுக அமைத்துள்ளது. 730 கோடி மகளிர் விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்கள் கல்வி பயில மாதம் 1000 ரூபாய் - 8 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 20 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்” என்று கூறினார்.

1 More update

Next Story