இந்திய சட்ட நடைமுறைகள் சரி செய்ய வேண்டிய அளவுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
x
Daily Thanthi 2025-07-13 09:32:24.0
t-max-icont-min-icon

இந்திய சட்ட நடைமுறைகள் சரி செய்ய வேண்டிய அளவுக்கு சீர்கெட்டு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசிய நிலையில், இதுபற்றி மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் கூறியது முற்றிலும் சரி. நம்முடைய நீதி நடைமுறை விரைவாக செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்றார்.

இதனை மனதில் வைத்தே, குற்றவியல் நீதி முறையை முற்றிலும் மாற்றம் செய்வதற்காக, பிரதமர் மோடியின் அரசு மற்றும் நம்முடைய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பாரதீய நியாய சன்ஹிதா, பாரதீய நாகரீக சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்சிய சன்ஹிதா என 3 புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். அந்த நடைமுறையில் விரைவான மற்றும் வெளிப்படையான தன்மையை கொண்டு வந்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

1 More update

Next Story