ஜூலை 24-ல் எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
x
Daily Thanthi 2025-07-13 11:28:46.0
t-max-icont-min-icon

ஜூலை 24-ல் எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்ட சுற்றுப்பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் கடந்த 7-ம் தேதி தொடங்கினார். 21-ம் தேதி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் முதற்கட்ட பிரசாரம் நிறைவுபெறுகிறது.

இந்தநிலையில் ஜூலை 24 முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை 2-ம் கட்ட பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். 24-ம் தேதி புதுக்கோட்டை சுந்தர்வ கோட்டையில் 2-ம் கட்ட பயணத்தை தொடங்குகிறார். புதுக்கோட்டையில் தொடங்கும் சுற்றுப்பயணம் ஆகஸ்டு 8-ம் தேதி விருதுநகரில் நிறைவடைகிறது.

1 More update

Next Story