நாகையில் விஜயின் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு ... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
x
Daily Thanthi 2025-09-13 07:38:49.0
t-max-icont-min-icon

நாகையில் விஜயின் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு

நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

த.வெ.க.வினர் வரும் 20-ந்தேதி பிரசாரத்திற்கு அனுமதி கேட்ட நிலையில் அதே நாளில் தி.மு.க.வினர் கூட்டம் நடத்த ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாற்று இடங்களாக பரிந்துரைக்கப்பட்ட நாகை அபிராமி சன்னதி வாசல், புத்தூர் ரவுண்டானா, காடாம்பாடி ஐடிஐ வளாகத்திலும் இடவசதி போதாது விஜய் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

1 More update

Next Story