வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
x
Daily Thanthi 2025-09-14 07:11:26.0
t-max-icont-min-icon

வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடந்த விவகாரம்: அரசு ஊழியர் கைது


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி கிராமங்களில் சில வாரங்களுக்கு முன்பு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடந்தன. இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள், கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

கடந்த மாதம் 29-ந்தேதி, திருப்புவனம் வைகை ஆற்றில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட பல மனுக்கள் தண்ணீரில் மிதந்தன. இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story