சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளதுபற்றி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
x
Daily Thanthi 2025-07-15 14:19:33.0
t-max-icont-min-icon

சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளதுபற்றி மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், ஆக்சியம்-4 வரலாற்று திட்டத்தில் கேப்டன் சுபான்ஷு சுக்லா நல்ல முறையில் பூமிக்கு திரும்பியது, ஒவ்வோர் இந்தியனுக்கும் ஒரு பெருமையான தருணம்.

அவர் விண்வெளியை தொட்டு விட்டது மட்டுமில்லாமல், இந்தியாவின் விருப்பங்களை புதிய உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான அவருடைய பயணம் மற்றும் பூமிக்கு திரும்பி வந்தது என்பது, தனிப்பட்ட மைல்கல்லாக மட்டுமின்றி, இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி நோக்கங்களுக்கு ஒரு பெருமையான தருணமும் ஆகும். அவருடைய வருங்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

1 More update

Next Story