அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 3 மாதங்களாக தொடர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
x
Daily Thanthi 2025-09-17 12:34:11.0
t-max-icont-min-icon

அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 3 மாதங்களாக தொடர் சரிவு; அடுத்து என்ன? விரிவான ஓர் அலசல்

இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் 5-ல் ஒரு பங்கு அமெரிக்காவுக்கு செல்கிறது. இந்நிலையில், இந்திய உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதிக்கு, டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்புகளால், இந்திய ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (ஜி.டி.ஆர்.ஐ.) சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

ஜூன், ஜூலையை தொடர்ந்து ஆகஸ்டு மாதத்திலும் இந்திய ஏற்றுமதியானது தொடர்ந்து 3-வது மாதத்திலும் சரிவை கண்டது. ஜூலையுடன் ஒப்பிடும்போது, 16.3 சதவீதம் சரிவை சந்தித்து, ரூ.58,849 கோடியாக இந்திய ஏற்றுமதி உள்ளது. நடப்பு ஆண்டில் இந்த மாதத்திலேயே பெரும் சரிவை இந்திய ஏற்றுமதி துறை சந்தித்துள்ளது. இதனால் ஏற்பட்ட நஷ்டம், ஏற்றுமதியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story