வார இறுதி நாள்: சென்னையில் இருந்து 1,035 சிறப்பு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
x
Daily Thanthi 2025-09-18 13:09:02.0
t-max-icont-min-icon

வார இறுதி நாள்: சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கம்- எஸ்.இ.டி.சி அறிவிப்பு

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் 2 நாட்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன், கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. அதன்படி இந்த 2 நாட்களும் மொத்தம் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (19-ஆம் தேதி) 355 சிறப்பு பஸ்களும், வருகிற 20-ஆம் தேதி 350 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

1 More update

Next Story