
கனமழை எதிரொலி; முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதற்காக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அவசரகால செயல்பாட்டு மையத்தின் நடவடிக்கைகளையும் கேட்டு அறிந்துள்ளார்.
இந்த மையம் 24 மணிநேரமும் செயல்பட கூடிய மையம் ஆகும். வெள்ளம், மழை, புயல் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட விசயங்கள் பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு இந்த மையம் தகவல்களை அளிக்கும். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்த மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து உள்ளார். பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகளை பற்றியும் அப்போது அவர் கேட்டறிந்து உள்ளார்.






