
‘தமிழகத்தை மீட்டெடுக்க நர்மதையின் மைந்தன் மோடி வந்துள்ளார்’ - நயினார் நாகேந்திரன்
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-
"தமிழகத்தை மீட்டெடுக்க நர்மதையின் மைந்தன் மோடி வந்துள்ளார். இது பொதுக்கூட்டம் அல்ல, இது ஒரு மாநாடு. மதுராந்தகத்தில் நடக்கும் கூட்டத்தால் சென்னை சட்டமன்றத்தில் இன்று பெரிய பதற்றம். பல செடிகளில் பூத்த மணம் வீசுகின்ற மலர்கள் மாலையாகி இறைவனிடத்தில் சேரும். அதே போல் மணம் வீசும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் இன்று ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
இந்த மாநாட்டை வானமே வாழ்த்திக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தரும்போது சூரியன் மறைந்து போனது. நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அதற்கான வேலைகளை பிரதமர் மோடியும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் செய்து கொண்டிருக்கிறார்கள்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






