கரூருக்கு விஜய் சென்றால்... ராஜேந்திர பாலாஜி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025
Daily Thanthi 2025-10-26 11:57:54.0
t-max-icont-min-icon

கரூருக்கு விஜய் சென்றால்... ராஜேந்திர பாலாஜி பேட்டி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தனியார் மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "எடப்பாடி பழனிச்சாமி கூறும் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அதை செய்தால் இந்த அரசை நாங்கள் பாராட்டுவோம். அதை விடுத்துவிட்டு விளக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தால் இந்த அரசுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள். தீபாவளிக்கு தமிழகத்தில் 750 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்றுள்ளது தமிழகத்தின் சாபக்கேடு.

விஜய் கரூருக்கு சென்றால் மீண்டும் எதும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் செல்லவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடியோக்களில் பேசி துக்கம் விசாரித்து விட்டார். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நிச்சயமாக விஜய்க்கு தெரிந்து நடந்தது கிடையாது. இதில், ஏற்பட்டுள்ள சதிகள் எல்லாம் விசாரிப்பதற்கு தான் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் குடும்பத்தை நேரில் வரவழைத்துள்ளார் எனத் தெரிவித்தார்.

1 More update

Next Story