எம்.ஜி.ஆரின் தனி உதவியாளர் மறைவு - எடப்பாடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
x
Daily Thanthi 2025-06-28 07:32:43.0
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆரின் தனி உதவியாளர் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்


எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், நம் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருப்பவருமான `பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் தனி உதவியாளராகப் பணியாற்றிய மு. மகாலிங்கம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமனார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர் மகாலிங்கம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story