திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, வார... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
x
Daily Thanthi 2025-06-29 11:46:09.0
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, வார விடுமுறையை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இன்று வருகை தந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதைத்தொடர்ந்து பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்து வருகின்றன. கோவில் வளாகம், வள்ளி குகை, கடற்கரைப் பகுதி, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து, விளையாடி மகிழ்ந்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story