எகிப்தின் பணய கைதி விடுவிப்பு மற்றும் போர்நிறுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
Daily Thanthi 2025-03-30 04:06:17.0
t-max-icont-min-icon

எகிப்தின் பணய கைதி விடுவிப்பு மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஆகியவற்றுக்கான செயல் திட்டம் ஒன்றை வழங்கியது. இதற்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அமெரிக்க இஸ்ரேலியரான ஈடன் அலெக்சாண்டர் உள்பட 5 பணய கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த 5 பணய கைதிகளுக்கு ஈடாக, முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்த நிபந்தனைகளின்படி இஸ்ரேல் நடந்து கொள்ள வேண்டும் என ஹமாஸ் அமைப்பு எதிர்பார்க்கிறது. அதனுடன், நிவாரண பொருட்களையும் காசாவுக்குள் அனுமதிக்க வேண்டும் உள்பட 2-ம் கட்ட போர் போர்நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது.

எகிப்தின் இந்த செயல் திட்டத்திற்கு ஈடாக, இஸ்ரேலும் பதிலுக்கு செயல் திட்டம் ஒன்றை அளித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, 5 பணய கைதிகள் விடுவிப்புக்கு ஈடாக, காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வழிவகுக்கும் என இஸ்ரேலின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story