வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளிடையே நீர்ச்சத்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025
x
Daily Thanthi 2025-06-30 09:19:08.0
t-max-icont-min-icon

வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளிடையே நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும் நீர்ச்சத்துக் குறைபாடால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படாமல் தடுக்கவும் வாட்டர் பெல் திட்டம் கொண்டுவரப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. இந்த நிலையில், இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என பள்ளிகளில் மணி ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாது தண்ணீர் அருந்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புச் சூழல் பாதிக்கப்படாத வகையில், பள்ளிகளில் 2 - 3 முறை வாட்டர் பெல் அடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் இந்த புதிய நடைமுறை பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

1 More update

Next Story