
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு
அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி மனுவை நீதிபதி செந்தில்குமார் தள்ளுபடி செய்தார்.
மேலும் பாடல்களை உருமாற்றம் செய்வதை தடுக்கவும், அனுமதி இன்றி பயன்படுத்துவதை தடுக்கவும் இளையராஜாவுக்கு உரிமை உள்ளது என்றும், பிரதான வழக்கின் விசாரணை ஜனவரி 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தும் உத்தரவிடப்பட்டது.






