சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு: இந்திக்கு 4... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
x
Daily Thanthi 2025-11-04 10:19:02.0
t-max-icont-min-icon

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு: இந்திக்கு 4 நாள் இடைவெளி, தமிழுக்கு ஒரே ஒரு நாளா? அன்புமணி கண்டனம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ நடத்தவிருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் இந்தி தேர்வுக்கும், அதற்கு முன்னும் பின்னும் உள்ள தேர்வுகளுக்கும் முறையே 2 மற்றும் 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் பாடத்தேர்வுக்கு முன்னும், பின்னும் உள்ள தேர்வுகளுக்கு ஒரு நாள் மட்டுமே இடைவெளி விடப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளில் கூட மொழி வேறுபாடு காட்டப்படுவது கண்டிக்கத்தக்கது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பொத்த்தேர்வுகளுக்கான இறுதி செய்யப்பட்ட கால அட்டவணை கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கும் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் தேர்வாக பிப்ரவரி 17ஆம் தேதி கணிதப் பாடத் தேர்வு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி ஆங்கிலம், 23ஆம் தேதி தமிழ் மற்றும் மாநில மொழிகள், 25ஆம் தேதி அறிவியல், 27ஆம் தேதி கணினி அறிவியல் சார்ந்த பாடங்கள், மார்ச் 2ஆம் தேதி இந்தி, மார்ச் 7ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்திருக்கிறது. இந்த அட்டவணை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது.

1 More update

Next Story