துடிப்பான கிராமங்களுக்கான திட்டம்-2 என்ற 2-வது... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
Daily Thanthi 2025-04-05 14:07:35.0
t-max-icont-min-icon

துடிப்பான கிராமங்களுக்கான திட்டம்-2 என்ற 2-வது கட்ட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.6,839 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

2028-29 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டம், அருணாசல பிரதேசம், அசாம், பீகார், குஜராத், மணிப்பூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட கிராமங்களில் அமல்படுத்தப்படும்.

இந்த 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்தே முழு அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 100 சதவீதம் மத்திய அரசு திட்டம் என்ற அளவில் அது செயல்படுத்தப்படும் என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

1 More update

Next Story