Gen Z வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
x
Daily Thanthi 2025-11-05 07:32:01.0
t-max-icont-min-icon

'Gen Z' வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:-

அரியானாவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெறுவதை தடுத்து, தோற்கடிக்க சதி நடந்துள்ளது. பல கருத்துகணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் என கூறியிருந்தன. ஆனால் முடிவு வேறாக இருந்தது. வரலாற்றில் முதல்முறையாக தபால் வாக்குகளுக்கும், EVM வாக்குகளுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது.

அரியானா சட்டமன்றத் தேர்தலில் பிரேசில் மாடல் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் பல பெயர்களில் 22 வாக்குகள் பதிவாகி உள்ளது. அரியானா சட்டமன்றத் தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளது.

தேர்தல் முறைகேடுகளை புரிந்துகொண்டு 'Gen Z' வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பிரேசில் பெண் மாடல் புகைப்படத்தை பயன்படுத்தி பல வாக்காளர்களை உருவாக்கி உள்ளனர்.

அரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாகக் கூறி மாபெரும் மோசடி செய்துள்ளனர். ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள், பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

1 More update

Next Story