மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
x
Daily Thanthi 2025-05-06 11:56:10.0
t-max-icont-min-icon

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான சிறப்பு கட்டண அனுமதி சீட்டு விநியோகிக்கப்படுகிறது. இதன்படி, 8-ந்தேதி நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 என 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகம் செய்யப்படும்.

ரூ.200 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 3 ஆயிரம் பேரும், ரூ.500 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் புக் செய்த பொதுமக்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கட்டண பாஸ் வழங்கப்படுகிறது.

சிறப்பு கட்டண சீட்டு பெற மதுரை மேல சித்திரை வீதி பகுதியில் உள்ள பிர்லா விடுதியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story