
2026 தேர்தலில் திமுக -தவெக இடையேதான் போட்டி - டிடிவி தினகரன்
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:-
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தலுக்கு பிறகே நடத்த வேண்டும். சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தள்ளிப்போட வேண்டும். சாமானிய மக்களுக்கு SIR படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படும்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும். விஜயின் வருகையால் அடுத்த தேர்தலில் அதிமுக 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும். அதிமுக ஆட்சிக்கு வருவதைவிட பொதுச்செயலாளர் பதவியை விட்டுவிடக் கூடாது என பழனிசாமி நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமியுடன் நான் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் நான் ஓய மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






