
“அமித் ஷா-வா? அவதூறு ஷா-வா..?” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
திண்டுக்கல்லில் 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 111 முடிவுற்ற பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து அந்த நிகழ்வில் பேசிய அவர், “நகரங்கள் மட்டுமல்லாது கிராமப் புறங்களும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற வேண்டும் என்பதே அரசின் இலக்கு. மக்களின் முக மலர்ச்சியைக் காண ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியை விட, திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 19 லட்சம் மெட்ரின் டன் அதிக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானல் மலை கிராமத்தில் 100 ஏக்கரில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் சுற்றுலா முதலீட்டு பூங்கா அமைக்கப்படும். வடமாநிலங்களைப் போல வெறுப்பு பிரசாரம் செய்யலாம் என நினைக்கிறார்கள். அமித் ஷாவா? அவதூறு ஷாவா?
உண்மையான பக்தர்கள் திமுகவை பாராட்டுவார்கள். திமுக ஆட்சியில் 4 ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.






