தி.மு.க. சார்பில் அறிவுத் திருவிழா  திமுகவின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
x
Daily Thanthi 2025-11-08 05:07:53.0
t-max-icont-min-icon

தி.மு.க. சார்பில் அறிவுத் திருவிழா

திமுகவின் 75ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிவுத் திருவிழா தொடங்கியது. அறிவுத் திருவிழா நிகழ்வில் முற்போக்கு புத்தகக் காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ எனும் தலைப்பில் நடைபெறும் 2 நாட்கள் கருத்தரங்கத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 

1 More update

Next Story