தோரணமலை முருகன் கோவிலில் கடைசிவெள்ளி வருணகலச... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026
x
Daily Thanthi 2026-01-09 06:14:07.0
t-max-icont-min-icon

தோரணமலை முருகன் கோவிலில் கடைசிவெள்ளி வருணகலச பூஜை 


தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களும், முனிவர்களும் வழிபட்ட பழமையும் பெருமையும் உடையதாகும். ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி அன்று மலை மீது உள்ள சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு வந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதுபோல இன்று 9-1-2026 மார்கழி மாத கடைசி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக 21 பக்தர்கள் மலையேறி அங்குள்ள சுனையில் இருந்து குடங்களில் புனித நீர் கொண்டுவந்தனர். அதனுடன் அடிவாரத்தில் பிள்ளையார் கோவிலில் வழிபட்டனர்.

1 More update

Next Story