மராட்டியத்தின் புனே நகரில் கொந்த்வா பகுதியில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025
Daily Thanthi 2025-02-09 12:20:43.0
t-max-icont-min-icon

மராட்டியத்தின் புனே நகரில் கொந்த்வா பகுதியில் என்.ஐ.பி.எம். சாலையில் அமைந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று தீப்பற்றி கொண்டது. தீ மளமளவென கட்டிடத்தின் மேல்பகுதி வரை பரவியது. கரும்புகையும் சூழ்ந்து கொண்டது.

இந்த சம்பவத்தில், 2 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மற்றொருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story