ரூ.3,201 கோடி முதலீடு, 6,250 நபர்களுக்கு வேலை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
x
Daily Thanthi 2025-09-01 13:11:58.0
t-max-icont-min-icon

ரூ.3,201 கோடி முதலீடு, 6,250 நபர்களுக்கு வேலை வாய்ப்பு... ஜெர்மனியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன

2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திடவும், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் பல்வேறு முன்னெடுப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் டசெல்டோர்ப் நகரில் Knorr Bremse, Nordex குழுமம், ebm-papst ஆகிய நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீட்டில் சுமார் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

1 More update

Next Story