டெல்லி; காற்று மாசுபாட்டால் அதிகரித்து வரும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-11-2025
x
Daily Thanthi 2025-11-10 12:11:44.0
t-max-icont-min-icon

டெல்லி; காற்று மாசுபாட்டால் அதிகரித்து வரும் நெஞ்சு பாதிப்புகள்: டாக்டர் எச்சரிக்கை

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு கடுமையான சுகாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி மேதாந்தா மருத்துவமனையின் நுரையீரல் நிபுணரான டாக்டர் அரவிந்த் எச்சரிக்கை செய்துள்ளார்.

இன்று காலை 8 மணியளவில் என்.சி.ஆர். பகுதியில் காற்று தர குறியீடு 345 ஆக இருந்தது. இது மிக மோசம் என்ற அளவில் உள்ளது. இதுபற்றி அவர் கூறும்போது, சுவாச பாதிப்புகளால் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். அவர்களில், குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுக்கு இருமல், காய்ச்சல், ஜுரம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் உள்ளன. மூக்கொழுகுதல், விரைவாக சுவாசித்தல் உள்ளிட்ட பாதிப்புகளும் காணப்படுகின்றன.

1 More update

Next Story