ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை - அரசு... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா:  வெளியான புதிய தகவல்
x
Daily Thanthi 2025-05-11 07:04:25.0
t-max-icont-min-icon

ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை - அரசு பெருமிதம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.10,27,547 கோடி புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32.23 இலட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது

திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் 2020-2021-ல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி 2024-2025-இல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருமடங்கு உயர்ந்து சாதனை படைத்தது.

மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் மராட்டியம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநிலங்களைவிட அதிகமாக 14.65 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணுப் பொருள்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது தமிழ்நாடு.

1 More update

Next Story