சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன்.. புதிய உத்தரவை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
x
Daily Thanthi 2025-06-11 07:48:53.0
t-max-icont-min-icon

சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன்.. புதிய உத்தரவை திரும்ப பெறவேண்டும்: சீமான் வலியுறுத்தல்

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நுகர்வோர் கடன் மதிப்பெண் (சிபில் ஸ்கோர்) அடிப்படையில் மட்டுமே இனி வேளாண் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியே மக்களுக்கு எதிரான தன்னுடைய புதிய நடைமுறையைத் திரும்ப பெற்றுவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு எதிரான இத்தகைய கடுமையான விதிமுறையை விதித்திருப்பது ஏன்? ரிசர்வு வங்கி விதிமுறைகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறிய தமிழ்நாடு அரசு, தற்போது வணிக வங்கிகளுக்கான நடைமுறையை கூட்டுறவு வங்கிக்குப் பொருத்துவது முறைதானா? என்றும் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

1 More update

Next Story