மேட்டூர் அணை இன்று திறப்பு; முதல்- அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
x
Daily Thanthi 2025-06-12 02:34:37.0
t-max-icont-min-icon

மேட்டூர் அணை இன்று திறப்பு; முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்


இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். அதற்காக மேட்டூர் அணை பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீரை திறந்து வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி ஆற்றில் பூக்களை தூவுகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.


1 More update

Next Story