‘தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
x
Daily Thanthi 2025-11-12 14:24:02.0
t-max-icont-min-icon

‘தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்’ - எல்.முருகன்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக பேசிய பேச்சுகள், அறிக்கைகள், கடிதங்கள், தேர்தல் வாக்குறுதிகளை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், எண் 153-ல், ‘‘அறநிலையத்துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித் துறையில் மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்புப் பணியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

1 More update

Next Story