தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்... இன்றைய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025
x
Daily Thanthi 2025-10-13 04:11:12.0
t-max-icont-min-icon

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. கிடுகிடுவென அதிகரிப்பதும், பின்னர் சற்று சரிவதும் என்ற நிலையிலேயே பயணிக்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஒரே நாளில் 2 முறை விலை மாற்றத்தையும் சந்திக்கிறது.

அந்தவகையில் நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் உயர்ந்து இருந்தது. இதேபோல் பிற்பகலில் கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் அதிகரித்து இருந்தது. ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,525-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் 92,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

1 More update

Next Story